அமெரிக்காவில் நியூயார்க் நகரின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸோஹ்ரான் மம்தானி பல வகையிலும் குறிப்பிடத்தக்க ஒருவர். 1892ஆம் ஆண்டுக்குப் பிறகு நகரத்தின் இளைய மேயர், அதன் முதல் முஸ்லிம் மேயர் மற்றும் ஆப்பிரிக்காவில் பிறந்த முதல் மேயர் என்ற சிறப்புகளை அவர் பெறுகிறார். அதிபர் டிரம்ப் எதிர்ப்பை மீறி வென்றுள்ள மம்தானிக்கு காத்திருக்கும் சவால்கள் என்ன?