இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதன் மூலம் யுத்தக்குற்றவாளிகளும் மொசாட் குழுவினரும் நாட்டுக்குள் வருவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தலை அரசாங்கமே ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை வன்மையாக எதிர்ப்பதுடன் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலுக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.