2006 ஆம் ஆண்டு மும்பை புறநகர் ரயில்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்து 19 ஆண்டுகளும், விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 10 ஆண்டுகளும் கழிந்துவிட்டன. இந்த நிலையில் வழக்கின் மேல்முறையீட்டில் நேற்று தீர்ப்பு வழங்கிய மும்பை உயர்நீதிமன்றம் தண்டிக்கப்பட்ட 12 பேரையும் விடுதலை செய்துள்ளது. ஆனால் பல கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியாமல் உள்ளது.