வீட்டில் நீங்கள் உங்களது குழந்தையை அழைத்து சீனி போத்தலைக் கொண்டு வருமாறு கூறினால், அக்குழந்தை உப்பு போத்தலையோ வேறு ஏதாவதொன்றையோ கொண்டு வந்து தரலாம். இன்று பாடசாலையில் என்ன படித்தீர்கள் என்று கேட்டால், படித்த விடயத்தை கிரகித்துச் சொல்வதற்கு சிரமம் எடுத்துக் கொள்ளாமல், “ஒன்றும் இல்லை” எனக் கூறலாம். பாடசாலை விட்டு வந்ததும் அவர்களுடைய பேக்கைத் திறந்து பார்த்தால் புத்தகங்கள் குழம்பிப் போயிருக்கும்;