பலஸ்தீனக் குழுவின் அரசியல் அலுவலகம் அமைந்துள்ள கட்டார் தலைநகரில் கடந்த செவ்வாயன்று (09) சிரேஷ்ட ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. 'ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைமையை இலக்கு வைத்து IDF (இஸ்ரேலிய இராணுவம்) மற்றும் ISA (பாதுகாப்பு நிறுவனம்) ஆகியவை துல்லியமான தாக்குதலை நடத்தின,' என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.