தேசிய மீலாதுன் நபி விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை அம்பலாந்தோட்டை, மெலே கொலனி கிராமத்தில், மஸ்ஜிதுல் அரூஸியா ஜும்ஆ பள்ளிவாசல் மைதானத்தில் நடைபெற்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தேசிய விழா ஏற்பாடு செய்யப்பட்டதுடன், பிரதேசத்தின் மகா சங்கத்தினர் உட்பட அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்களின் ஆதரவும் பங்களிப்பும் இதற்கு கிடைத்திருந்தது.