இஸ்ரேல் பலஸ்தீன மக்களை குறிவைத்து மேற்கொண்டுவரும் இனப் படுகொலைகளை வன்மையாக கண்டிக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இலங்கை குடியரசிற்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான முதலீடு, பாதுகாப்பு ஒப்பந்தங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.