நேரலைப் பாலியல் சுரண்டல்கள்

Wait 5 sec.

நேரலைப் பாலியல் துன்­பு­றுத்தல் (Live-streamed Sexual Abuse of Children) என்­பது சிறு­வர்கள் இணை­யத்தில் நேர­டி­யாகத் தோன்றி, பாலியல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வதைக் குறிக்கும். சிறு­வர்­களை உலகில் பல்­வேறு இடங்­க­ளி­லி­ருந்து ரசிக்கும் பார்­வை­யா­ளர்கள் முன்­னி­லையில் தோன்­ற­வைத்து, பாலியல் சார்ந்த நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்தி, அதன்­மூலம் சிலர் பணம் சம்­பா­திக்கும் செயல் உலகம் பூரா­கவும் இடம்­பெ­று­கின்­றது. இச்­செ­யற்­பாட்டை உலகில் எந்த ஒரு இடத்­தி­லி­ருந்தும் பார்க்­கக்­கூ­டி­ய­வாறு வெப்கேம் அல்­லது வேறு நேரலைக் கரு­விகள் மூலம் ஒளி­ப­ரப்பு இடம்­பெறும் (ECPAT International, 2017). இது சில சம­யங்­களில் ஒரு சூதாட்­ட­மா­கவும் இடம்­பெ­று­வ­துண்டு.