இலங்கைக்கான கத்தார் தூதர் ஜாசிம் பின் ஜாபர் அல்- சுரூர் வெளிவிவகார அமைச்சரை சந்தித்து பிரியாவிடை பெற்றுக் கொண்டார். இதில் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கும் கத்தார் அரசுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதில் பதவி விலகும் தூதுவரின் சிறப்பான பங்களிப்பிற்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.