சவூதி வாழ் இலங்கையர்களின் கோரிக்கைக்கு அமைய இடைநிறுத்தப்பட்டுள்ள கொழும்பு- ஜித்தாவுக்கான விமான சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய ஒருமைப்பாடு பிரதியமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார். இலங்கையில் உள்ள சவூதி தூதரகத்துடனும் விமான சேவைகள் நிறுவனத்துடனும் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.