பிரதமர் ஹரினி அமரசூரிய நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில், 2025 இன் முதல் எட்டு மாதங்களில் மட்டும், 425 பெண்கள் இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இதில் அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவெனில், 38 பெண்கள் தங்கள் பச்சிளம் குழந்தைகளுடன் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதாகும். இன்றுவரை, 15 சிறுவர்கள் மற்றும் 23 சிறுமிகள் உட்பட 38 குழந்தைகள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தங்கள் தாயுடன் வாழ்ந்து வருகின்றனர்.