உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரியை அடையாளம் கண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன பாராளுமன்ற உயர்குழுவுக்கு தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்றைய தினம் அரச உயர் பதவிகள் தொடர்பிலான உயர் மட்டக் குழுக் கூட்டம் பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் பதவியை தொடர்வது குறித்து ஆராயப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின்போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.