தாஜுதீன் படுகொலை தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் போது ராஜபக்ஷர்கள் கலக்கமடைவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல, ஐக்கிய மக்கள் சக்தி ஏன் கலக்கமடைகிறது என்பது எமக்கு தெரியவில்லை. தாஜூதீனின் படுகொலைக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று நாமல் ராஜபக்ஷ குறிப்பிடுகிறார். அவர்கள் எவ்வாறு நீதியை பெற்றுக்கொடுத்தார்கள். சாட்சியங்களை அழித்தார்கள். இதனால் தான் இன்றும் விசாரணைகள் தொடர்கிறது.