டிரம்பின் காஸா போர் நிறுத்த திட்டம் குறித்து இஸ்ரேல் ஊடகங்கள் கூறுவது என்ன?

Wait 5 sec.

காஸாவில் உடனடியாகச் சண்டையை நிறுத்திப் பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 20 அம்சச் சமாதானத் திட்டத்திற்கு இஸ்ரேலிய ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்தன. இந்த நடவடிக்கை நெதன்யாகுவின் வேறு வழியின்மை என்பதைக் காட்டுவதாகவும், டிரம்ப்பின் முடிவை இஸ்ரேலியப் பிரதமர் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்றும் ஊடகங்கள் கருத்துத் தெரிவித்தன.