ஒக்டோபர் 7, 2025 அன்றுடன் காஸாவில் போர ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இந்த இரண்டு ஆண்டுகாலப் போரின் விளைவாக 60,000 உயிர்கள் பறிபோயுள்ளதுடன் 5 இலட்சம் பேர் கடுமையான பட்டினியை எதிர்கொள்கின்றனர்; அத்துடன், காஸாவில் உள்ள அனைத்து சுகாதார வசதிகளும் அழிக்கப்பட்டுள்ளன. இது பிராந்தியத்தின் நிலவும் மனிதாபிமானப் பேரழிவின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது.