துபையில் நடந்த விமானக் கண்காட்சியின்போது இந்திய போர் விமானமான தேஜஸ் கீழே விழுந்து நொறுங்கியதில் விங் கமாண்டர் நமன்ஷ் ஸ்யால் உயிரிழந்தார்.இந்த விபத்து துபையின் அல்-மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி மதியம் 2 மனி அளவில் நேர்ந்தது. இந்த விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. தேஜஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிவது அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.