'திட்வா' புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உலக வங்கியின் பூர்வாங்க மதிப்பீட்டு அறிக்கையின் தரவுகளுக்கு அமைய, இப்பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட பௌதிக ரீதியான நேரடிப் பாதிப்புகளின் பெறுமதி 4.1 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு கடன் நெருக்கடி ஏற்பட 50 சதவீத வாய்ப்புள்ளதாகச் சர்வதேச நாணய நிதியமே எச்சரித்துள்ள சூழலில் இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்குமா?