உலகின் வளர்ச்சியுற்ற சமூகங்கள் அனைத்தும் அறிவு என்ற அத்திவாரத்தின் மீதே எழுச்சி என்ற கட்டிடத்தை எழுப்பியுள்ளன. இங்கே அறிவுக்கு அடிப்படையாக இருப்பது வாசிப்பாகும். வாசிப்பு குறையும் போது அறிவு குறைகிறது. அறிவு குறையும் போது அழிவு நெருங்குகிறது என்பதே அர்த்தம்.