சீர்மைப்படுத்தலில் ஈடுபடுபவர்கள் முதலில் நலிவுற்ற நிலையிலுள்ள சிறுவர்களையே கண்டுபிடிக்கின்றனர். பொருளாதார ரீதியாக, அல்லது சமூக ரீதியாகப் பாதிக்கப்பட்டு தமது பிரச்சினைகளைச் சொல்வதற்கு நம்பிக்கையான ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கின்ற சிறுவர்களை இத்தகையோர் கண்டுபிடிக்கின்றனர். அத்தோடு, தான் விரும்பியவாறு இணையத்தளத்தைப் பயன்படுத்தும் சிறுவர்களையும் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். சிறுவர்களது சமூக ஊடகத் தளங்களைக் கூர்மையாக நோட்டமிட்டு, அவர்களின் பொருளாதார நிலைமையக் கணித்துக் கொள்கின்றனர்; சிறுவர்களின் நலிவுற்ற தன்மையை உறுதிப்படுத்திக் கொள்கின்றனர்.