தெற்கு இரானில் உள்ள ஒரு பள்ளியின் மீது அமெரிக்கா -இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக இரானிய அதிகாரிகள் கூறும் நிகழ்வில் கொல்லப்பட்ட மாணவிகள் மற்றும் ஊழியர்களுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டுள்ளன. தங்கள் மகள்களை இழந்த தாய்மார்கள் மற்றும் தந்தையரின் துயரத்தை பின்னணியில் ஒருவர் விவரித்துக் கொண்டிருக்க, இஸ்லாமியக் குடியரசின் தேசியக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள் கூட்டத்திற்கு நடுவே சுமந்து செல்லப்பட்டன.