"தவிர்க்க முடியாமல் தங்களை இலக்குகளாக மாற்றும் ஒரு போருக்கு முன்பு, குறைந்தபட்சம் தங்களைக் கலந்தாலோசிப்பார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை. அவர்கள் செய்த எதற்காகவும் அல்ல, மாறாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எடுத்த முடிவுகளால் இரானிய ஏவுகணைகள் அவர்களின் தலைநகரங்கள், விமான நிலையங்கள், எண்ணெய் உள்கட்டமைப்புகள் மற்றும் நிதி மாவட்டங்களைத் தாக்கின"