இரான் போரில் டிரம்பிடம் இருக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் அபாயங்களைக் கொண்டுள்ளது என்பதே அவருக்கு இருக்கும் முக்கிய சவால். அவர் தனியாகச் செயல்பட்டாலும் சரி, மற்றவர்களுடன் சேர்ந்து செயல்பட்டாலும் சரி, எளிய தீர்வு என எதுவும் இல்லை. இந்த மோதலுக்கு விரைவான, எளிமையான ஒரு முடிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகின்றன.