நாடளாவிய ரீதியில் கிட்டத்தட்ட 4,000க்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் காணப்படுகின்றன. இவற்றில் சுமார் 15,000க்கு மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.இவர்களுக்கு வழங்கப்படுகின்ற மாதாந்த சம்பளம் உள்ளிட்ட கொடுப்பனவுகள் தொடர்பில் பாரிய விமர்சனங்கள் கடந்த பல தசாப்தங்களாக நிலவி வருகின்றன.குறிப்பாக கொழும்பு போன்ற முக்கிய நகரங்களில் அமையப்பெற்றுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றுக்கின்றவர்களுக்கு பெறுமதியான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறுகின்றன.