விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாகத் திருப்பிக் கொடு என்ற கோசத்துடன் திருகோணமலை -முத்துநகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக தொடர் சத்தியாக்கிரக போராட்டமாக தொடர்ந்தும் 08 வது நாளாக நேற்றைய தினமும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தீர்வை எட்டும்வரை இப்போராட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ள பாதிக்கப்பட்ட தரப்பினர் தீர்மானித்துள்ளனர்.