கடந்த கட்டுரைகளில் குறிப்பிட்டது போல, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பக் கருவிகள் மிகவும் இலகுவாக சிறுவர்களை வந்தடைகின்றன. இலங்கை போன்ற நாடுகளில் கையடக்கத் தொலைபேசிகளின் பாவனை அதிகரித்து வருகின்றன. அத்தோடு, தமது அன்றாட கடமைகளைச் சிறுவர்களின் தொல்லையில்லாமல் செய்து முடிப்பதற்குப் பல பெற்றோர் தமது இலத்திரனியல் கருவிகளைச் சிறுவர்களுக்குக் கொடுப்பதே ஒரே வழி என நினைப்பதுண்டு. இதுவும் சிறுவர்களுக்குக் கருவிகள் வந்து சேர்வதற்கான வாய்ப்பாக உள்ளது. இதனால், பல மணி நேரங்களை அவர்கள் இணைய உலகில் செலவிடுகின்றனர்.