இஸ்லாமிய மதமாற்றத்தை கதைக்கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள 'தி கேரளா ஸ்டோரி 2' (The Kerala Story-2 Goes Beyond) படம், பிப்ரவரி 27 அன்று வெளியாகவிருந்த நிலையில், டிரெய்லரில் உள்ள காட்சிகளின் அடிப்படையில், அந்தப் படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை எதிர்த்தும், படத்தின் தலைப்பை மாற்றக்கோரியும் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.